வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Wednesday, August 17, 2011

வாங்களேன் பழம் சாப்பிடலாம்

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்கள்

நாம் அன்றாடம் எடுத்துகொள்ளும் பழவகைகளும் 
அதன் பயன்களும் என்ற தலைப்பில் நாம் 
பார்க்க போகிறோம் நண்பர்களே


முதலில் நாம் வாழைப்பழம் பற்றி பார்ப்போம்

வாழைப்பழம் நாம் அடிக்கடி எடுத்து கொள்ளும் பழ
வகைகளில் ஒன்று .
அதைப் பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம்
அது சம்பந்த மான நகைச்சுவை கூட உண்டு


ஏதாவது ஒரு விசேசம் என்றாலே தட்டில் வாழைப்
பழம் வைத்து சபையில் நடுவில் வைப்பார்கள் .
அப்பிடி சிறப்பு வாய்ந்தது .

அப்பிடிப்பட்ட அந்த வாழைப் பழத்தின் வகைகள் என்ன
அதாவது எத்தனை வகையான வாழைப்பழங்கள் இருக்கின்றன

அந்த வகை வகையான வாழைப் பழங்களின் சிறப்பு 
அதாவது அதன் பயன்கள் என்ன என்று பார்ப்போம் .

செவ்வாழை  :-



முதிலில் செவ்வாழைப் பழத்தைப் பார்ப்போம்.
செந்துளுவன் என்றும் அழைக்கப் படும் இப்பழம் 
பார்க்க தோல் சிகப்பாக இருக்கும் .இதை சாப்பிட்டால்
இரத்த உற்பத்தி ,தாது விருத்தி ,உடல் பலம் உண்டாகும்
.மலடு நீங்கும் .

நேந்திரம் பழம் :-



கேரளாவில் அதிகம் புழங்கும் பழம் நேந்திரம் பழம் . 
இது நீளமான தோற்றத்துடன் காணப்படும் .

இதனை சாப்பிட்டால் உடலுக்கு பலம் தரும் .
ஜீரண சக்தியை உண்டு பண்ணும்.

பச்சை வாழைப் பழம்:-



இதனைப் பார்த்திருப்பீர்கள் ,நீளமாக தோல் 
பச்சையாக இருக்கும் .

இதனை சாப்பிட்டால் மலச்சிக்கலை போக்கும். 
சூடு தணியும் .பித்தம் போக்கும் .

பேயன் பழம் :-





அடுத்ததாக பேயன் பழம் ,இது மொந்தன் பழம் 
என்றும் அழைப்பார்கள்.

இதுவும் மலச்சிக்கலை போக்கும் .மேலும் 
இதனை சாப்பிட்டால் உடல் சூடு தணியும் ,
பித்த சாந்தி உண்டாக்கும் .

பூவன் பழம் :-

இதனை சாப்பிட்டால் உடலுக்கு பலம் தரும் .
நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும்.மலச்சிக்கல் தீரும் .

சிங்கன் பழம் :-

இது உடல் நலிந்தவர்களுக்கு உடலைத் தேற்றும்.

துளுவன் பழம் ;-

இதனை சாப்பிட்டால் இரத்தம் உற்பத்தியாகும்.
உடலுக்கு சக்தி தரும் ,இளைத்த உடலை தேற்றும்.

மட்டிப் பழம் :-



இது குழந்தைகளுக்கு ஏற்றது ,உடல் வளர்ச்சி தரும் .


பொதுவாக  வாழைப் பழம் மலச்சிக்கலை தீர்க்கும் ,
ஆனால் வாத நோயாளிக்கு ஆகாது .


எலுமிச்சை பழம் :-



கனிகளிலே சிறந்தது எலுமிச்சை பழம் தான் .
இதனை ஊறுகாய் ,ஜூஸ் (பழச்சாறு )என்று 
பலவகைகளில் உபயோகிப்பதை பார்த்திருக்கலாம் .

கோவில்களில் பூஜைக்கும் ,சாமிக்கு மாலையாகவும் ,
பிரார்த்தனை நிறைவேற  வேல்களில் குத்தியும் 
பார்த்திருப்பீர்கள் .

இதனை தலையில் தேய்த்தும் குளிப்பார்கள் .உடலுக்கு
குளிர்ச்சியை தரும் ,முக்கியமாக தலைச்சூட்டை குறைக்கும் 

வெளி உபயோகம் இருக்கட்டும் ,உள்ளுக்குள்  எடுத்து 
கொள்வதால் என்ன இதன் பலன் .

வெப்பத்தை தணிக்கும் ,

கண்ணுக்கு குளிர்ச்சியை தரும்,

கண்ணுக்கு ஒளி தரும் ,

வாந்தி பேதியை நிறுத்தும்,

தலை சுற்றல்,மயக்கம் போக்கும் ,

அதாவது பேதி நிக்க அதிக சர்க்கரை சேர்த்து ,
சிறிது உப்பும் சேர்த்து அடிக்கடி குடித்தால் 
பேதி நின்று விடும் .

மயக்கம் ,தலை சுற்றுக்கு எலுமிச்சை சாருடன் ,
சம அளவு இஞ்சி சாரும் கலந்து கொடுக்க வேண்டும் .

சரி இந்த எழுமிச்சையாலே நல்லது மட்டும் தானே 
இருக்கு ,கெட்டது இல்லையே  என்று கேட்காதீர்கள் .

இருக்கு ,தீமையும் இருக்கு ,அது என்னன்னா

அளவுக்கு மீறினால் அமிர்தம் நஞ்சாகும் .
அமிர்தமே நஞ்சாகும் பொழுது எலுமிச்சை ????

ஆமாம்

பழச்சாற்றை தினந்தோறும் குடிக்க கூடாது

அதிகம் எடுத்துகொண்டால் விந்து நீர்த்து போகும்

எலும்பு பலம் குறையும்

சுண்ணாம்பு சத்து குறைந்து விடும்

முக்கியமாக வயிற்றுப் புண்ணுக்கு ஆகாது .

என்ன நண்பர்களே பழங்களின் அருமையில் இரண்டு 
பழங்களைப் பற்றி பார்த்தோம் .

பழங்களின் அருமை தொடரும்.....................




சிங்கத்தின் சிந்தனை :
                               
நாக்கில் எச்சில் ஊறுது ,ஆனா யாரையும் சாப்பிட முடியல

என்ன கொடுமை சார் இது ?




பின்னாடி இருக்கிற பாப்பா 
நீ 
முன்னாடி வந்தா ஆப்பா 




45 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

nalla visayangal

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிறுமலை வாழைப்பழம் கேள்வி பட்டிருகிங்களா? திண்டுக்கல் பேமஸ்.

M.R said...

வாங்க பிரகாஷ் நண்பரே

தொடர்ந்து வாருங்கள்

தங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி நண்பரே

M.R said...

சிறுமலை வாழைப்பழம் கேள்வி பட்டதில்லை

இருந்தாலும் தகவலுக்கு நன்றி நண்பரே

M.R said...

நண்பர்களே தங்களுக்கு தெரிந்த வாழைப் பழங்களின் பெயர்கள் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெறியப் படுத்துங்கள் .நன்றி நண்பர்களே

செங்கோவி said...

சாப்பாட்டுக்கு முன்னாடி தான் பழம் சாப்பிடணும்-னு ஆஃபீசர் தன் பதிவுல ஒரு தடவை சொன்னார்!

M.R said...

வாங்க செங்கோவி நண்பரே

எப்பிடியோ வாழைப் பழம் சாப்பிட்டால் சரி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேங்கப்பா, இத்தனை வாழைப்பழங்களா? ஆமா இது அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கேங்க?

செங்கோவி said...

பெண் என்றால் சிங்கமும் இரங்கும் போல!

M.R said...

வாங்க ராமசாமி நண்பரே
தங்களை வரவேற்கிறேன்
தங்கள் வருகைக்கு நன்றி

அந்த இன்னொரு பழம் தாங்க பிரகாஷ் கீழே கமண்டல போட்டிருக்கார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செங்கொவி அது ஆண் சிங்கம் அதான் அப்படி....!

M.R said...

செங்கோவி said....

பெண் என்றால் பேயே இறங்கும் பொழுது

சிங்கம் என்ன பண்ணும் பாவம்

M.R said...

பண்ணிக்குட்டி ராமசாமி said...

செங்கோவி அது ஆண் சிங்கம் அதான் அப்பிடி....!

பாப்பாவை பார்த்ததும் நாக்கை வெளியே நீட்டி இருப்பதை பார்த்து தானே சொல்றீங்க

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பழப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

செவ்வாழை - மலடு நீக்கும்.. இது செவிவழிக்கதையில் அறிந்ததா?? இல்லை நிஜமாவே இப்படி ஒரு மருத்துவ குணம் உள்ளதா???

Rathnavel Natarajan said...

பழங்கள் பற்றி அருமையான செய்திகள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

பல "சிக்கல்களுக்கு' வழி சொல்லி இருக்கீங்க மாம்ஸ்!

Anonymous said...

'பழ'மொழிகள் பயன் தரும்!

vidivelli said...

வாழைப்பழங்களின் நன்மை தீமை........
அருமையான பயன் தரும் பதிவு...
வாழ்த்துக்கள் சகோ..

கீழே படம் ஆப்புத்தான்..hahaa

M.R said...

வாங்க ரமணி நண்பரே

வருகைக்கும் ,அன்பான வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க சாய் பிரசாத் நண்பரே

செவ்வாழை உடலுக்கு பலம் தரும் பொழுது நரம்புகளும் வலுப பெரும் .

தாது விருத்தி ஆவதால் ,அதனால் ஏற்படும் மலடை நீக்க வழிவகுக்கும் .

புத்தகத்தில் படித்த செய்தி .

தாது இல்லா மலடை நீக்க தாது உற்பத்தி அதிகரிக்க செய்யணும் .

அதற்கான பதிவு முன்பே போட்டுள்ளேன் .

செவ்வாழை ஒன்றே மலடு நீக்க உதவும் என்று சொல்லவில்லை ,இதுவும் உதவும் .

நன்றி நண்பரே வருகைக்கு.

M.R said...

வாங்க ரத்னா வேல் ஐயா
தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

வாங்க நண்டு நொரண்டு நண்பரே

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க சிவா
தங்கள் வருகைக்கும் ,அன்புக்கும் நன்றி நண்பா

M.R said...

வாங்க ஷீ-நிசி

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ

M.R said...

வாங்க விடிவெள்ளி சகோ

தங்கள் வருகைக்கும் ,அன்பான வாழ்த்துக்கும் நன்றி சகோ.

Unknown said...

பயனுள்ள தகவல்கள். சைக்கிள் ரேஸ் போகிறவர்கள்,போட்டியின்போது எலுமிச்சை பழத்தை வாயில் வைத்துகொள்வதை பார்த்திருக்கிறேன்.களைப்பை போக்குமாம்

குறையொன்றுமில்லை. said...

நான் இருக்கும் பகுதியில் பச்சை வாழைதான் பெரு
மளவில் கிடைக்கும். சில மலயாளக்கடைகளில்
நேந்திரம் பழம் கிடைக்கும். அதனுடன் பூல்லாசெண்டன்னு ஒருபழம் கிடைக்கும். நாங்க அதை எல்சி கேலான்னு சொல்லுவோம். நம்ம பக்கம் மதுரை
பகுதியில் கிடைக்குமே சிறு மலைப்பழம் அதுபோல் சின்னதா இருக்கும் ருசியும் நல்லா இருக்கும். சிறுவர்முதல் பெரியவா வரை எல்லாருக்குமே பிடிக்கும். நம்மபக்கம் டஜன் கணக்கில் தருவாங்க இல்லியா இங்க கிலோ கணக்கில்தான் தராங்க. எல்சி கேலா ஒருகிலோவில் 15 பழம் வரையிலும் வரும் அதுக்கு30 ரூவா .

M.R said...

வாங்க ஆர.ஈழன் நண்பரே

தங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்துக்கும் நன்றி நண்பரே

மகேந்திரன் said...

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான செய்திகள் நண்பரே. தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே.
வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்திடலாம்
அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அதில்
நம்ம ஊர் நாட்டு வாழை பற்றி நீங்கள் சொல்லவே இல்லையே

M.R said...

வாங்க லக்ஷ்மி அம்மா

தாங்கள் கூறுவது போல் சில இடங்களில் வாழைப் பழத்தை கிலோ கிலோ கணக்கில் தான் தருவார்கள்

கேரளாவில் பழத்தை எடை போட்டுதான் தருவார்கள் அம்மா .

தாங்கள் கூறியிருக்கும் பழம் எனக்கு புதிய தகவல் .

தங்களின் இந்த தகவலுக்கு நன்றி அம்மா .

வருகைக்கு நன்றி

M.R said...

வாங்க மகேந்திரன் நண்பரே தங்களின் மேலான தகவலுக்கு நன்றி நண்பரே .

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .

நான் தகவல்களை புத்தகத்தில் சேகரித்து பதிவில் போடுகிறேன் நண்பரே ,
நான் ரெஃபர் செய்த புத்தகங்களில் நாட்டு வாழையை பற்றிய தகவல் இல்லை நண்பரே , கிடைத்தால் பகிர்வேன் நண்பரே .

இருந்தாலும் வாழைப்பழ போது பலனான ஜீரணம் ,மலமிளக்கி இவ்விரண்டையும் இதற்கும் எடுத்து கொள்வோம் .

நன்றி நண்பரே

சக்தி கல்வி மையம் said...

தொடர்ந்து பயனுள்ள பதிவுகள்..
நன்றி சகோ..

Riyas said...

நல்ல உபயோகமான விடயங்கள்தான்..

tamilmanam voted

Anonymous said...

இந்த பழம் புளிக்கவில்லை...பிடித்திருந்தது...

அந்நியன் 2 said...

பயனுள்ள பகுதியை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

பழங்களின் பதிவு பயனுள்ளது... பாராட்டுக்கள்

M.R said...

வாங்க கருன் நண்பரே

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க ரியாஸ்
தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க reverie
தங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க அந்நியன் 2

தங்களை வரவேற்கிறேன்

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

தொடர்ந்து வாருங்கள்

M.R said...

வாங்க மாய உலகம்
தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ..

RAMA RAVI (RAMVI) said...

பெங்களூரில் வாழைப்பழங்களில் ஒன்றான எலக்கி என்கிற பழம் நிறைய கிடைக்கிறது.மிகவும் சிறியதாக இருக்கும் இது உடல் சூடு தனிக்கவும் மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.

நல்ல பயனுள்ள தகவல்கள். மீதி பழங்களை பற்றியும் தொடர்ந்து எழுதவும்.

M.R said...

வாங்க ராம்வி சகோதரி

தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out