இசை என்பது அனைவரும் ரசிக்க கூடிய ஒன்று
சந்தோசம் என்றாலும் ,சோகம் என்றாலும் ,பிறப்பு
இறப்பு இரண்டிலும் இரண்டற கலந்த ஒன்று இசை.
.
திரையில் வரும் பாடல்கள் சில காலத்தால் அழியாததாக
இருக்கும். சில அந்த நேரத்தில் முணுமுணுக்க வைக்கும் .
எனக்கு பிடித்த மற்றும் நான் ரசித்த பாடல்களை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்
.
ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும் .
ஒருவருக்கு பிடித்த ஒன்று மற்றவருக்கு
பிடிக்காமல் போகலாம் .
எனது நண்பர்களான உங்களிடம் எனது ரசனையை
பகிர்ந்து கொள்ள ஆசை அவ்வளவே .
அன்பு உலகமாகிய இத்தளத்தில் முதல் பாடலாக
" அன்பு "
என்னும் பெயர் கொண்ட படத்தில் தவமின்றி கிடைத்த
என்று தொடங்கும் பாடலை உங்களுடன் பகிர்கிறேன் .
பாடலாசிரியர் பா.விஜய் எழுதி ,வித்யாசாகர் இசையில்
ஹரிஹரன் மற்றும் சாதனா ஷர்கம் பாடிய பாடலானது
எனக்கு மிகவும் பிடிக்கும் .
பாடல் வரிகள்
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஒரு வரம் கிடைக்க வேண்டும் என்றால் கடுமையாக தவம் புரிதல் வேண்டும்.ஆனால் இந்த வரியில் தவம் மேற்கொள்ளாமல் சுலபமாக கிடைத்த வரம் என தன் வாழ்க்கைத்துணையை பார்த்து சொல்வது போல் அமைந்துள்ளது .
நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்.
நீ சூரியன் நான் வான்முகில்
நீ நடந்திடும் பாதை ஆகிறேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்
இதில் நாயகன் நாயகியை சூரியனாகவும் தன்னை
நிலாவாகவும் ஒப்பிட்டு அவள் இல்லையென்றால்
தன் மனதில் சந்தோசமும் ,முகத்தில் பிரகாசமும்
இல்லை என்று சொல்லுவது அழகு .
சூரியன் பஞ்சு போன்ற மேகத்தின் ஊடே நடந்தால்
சூரியனுக்கு கால் வலி தெரியாதாம் ,அதைப் போல
அவளை நாயகன் தாங்குவேன் என்று சொல்கிறான்
.
அதற்கு நாயகி நாயகனிடம் சூரியன் ஒளிபட்டு தாமரை
இதழ் மலர்வதை போல அவனைப் பார்த்தால் மட்டுமே
தனக்கு சந்தோசம் என்று சொல்வது அழகு .
அதைவிட சூரியன் கடலின் ஊடே வெளிவரும் காட்சியை
உவமை படுத்தி தன் மணாளனை தன் மடியில் தாங்குவேன்
என்று சொல்லி அவள் தாய்மை அன்பை வெளிப்படுத்தி
இருப்பது அருமை .
தவமின்றி கிடைத்த வரமே
ஓ...இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஓ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற
வேண்டாமா வேண்டாமா
கடிகாரம் இல்லாத ஊர்பார்த்து குடியேற
வேண்டாமா வேண்டாமா
கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும்
பகலெல்லாம் இரவாகிப் போனால் என்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டால் என்ன
நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
,தங்களை யாரும் கட்டுப்படுத்தாத இடத்தில் சென்று
நேரம் போவதே தெரியாமல் கைரேகை தேயுமளவிற்கு
கைகோர்த்து உலாவரவேண்டும் ,
அன்பின் வெளிப்பாடான முத்தத்தை இத்தனை என்ற
எண்ணிக்கையில் கட்டுப்படுத்தாமல் , விடியல் இல்லா
இரவாக நாள்தோறும் அன்பு பிணைப்பில் கட்டுண்டு
அவர்களின் இரண்டு உயிர்களின் அன்பினையும் ஒரு
உடலுக்குள் செலுத்தி (குழந்தை ) வாழ வேண்டும் என்ற
வரிகள் அடடா அருமை.
சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும்
தருவாயா தருவாயா
கண்ணென்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா வருவாயா
விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உனையே நான் மீண்டும் சேர்வேன்
இனி உன்மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்..
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்.
நீ சூரியன் நான் வான்முகில்
நீ நடந்திடும் பாதை ஆகிறேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்
தவமின்றி கிடைத்த வரமே ஓ...
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
கண்ணை போர்வையாகவும் கனவை மெத்தையாகவும்
உவமை படுத்தி அவனை தன் கனவுக்குள் வர சொல்கிறாள் .
நான் விழுவதே உன் கனவில்
எழுவதே உன் நினைவில்
என்று வரும் வரிகள் நெஞ்சை தொட்ட வரிகள்
எத்தனை ஜென்மம் என்றாலும் நீ மட்டுமே என்து
வாழ்க்கை துணை என்று முடித்திருப்பது அருமை .
நட்பே எனக்கு பிடித்த ,நான் ரசித்த இப்பாடல் அதன்
வரிகள் உங்கள் மனதை தொட்டுபோனதா?
ரசித்த பாடல் தொடரும் ...........
44 comments:
அது சூப்பர் சாங் பாஸ்!
ஆனா மட்டரகமா பாட்டை எடுத்திருப்பாங்க..இந்தப் பாட்டை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்.
வாங்க செங்கோவி எனக்கு பிடித்தது உங்களுக்கும் பிடித்தது சந்தோசம் .
அண்ணே..அனுஷ்காண்ணே..
ஆட்களை விடுங்க நாம வரிகளையும் ,அதன் அர்த்தங்களையும் ரசிப்போம்
அனுஷ்காவே தாங்க
நல்ல பாடல் வரிகள்... குறிப்பாக "நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன"
மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள்.
வாங்க பிரியா சகோ.
தங்களை வரவேற்கிறேன் .
தொடர்ந்து வாருங்கள்
தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோ
அருமையான பாடல் வரிகள் வித் விளக்கங்களுடன் கலக்குது
வாங்க மாய உலகம்
தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ.
thamilmanam3
எனக்கும் இந்தப் பாடல் மிக மிகப் பிடிக்கும்,
மனதிற்குப் பிடித்த பாடலுக்கான பொருள் விளக்கம் அருமை.
வாங்க நிரூபன் நண்பரே
தங்கள் வருகைக்கும்,அன்பான கருத்துக்கும் நன்றி நண்பரே .
அழகான பாடல்
ரசித்ததற்கும் ரசிக்க வைத்ததற்கும் நன்றி நண்பரே.
பாடல் மட்டுமே அருமை ..படம் மொக்கை
நல்ல பாடல்..ரசித்தேன் சகோ/
சூப்பர் பாட்டு..
அதன் பாடல் வரிகள் விளக்கம் கொடுத்த விதம் அருமை...
வாழ்த்துக்கள். தொடருங்கள்..
இதுவரை இந்தப்பாடல்கள் கேட்டதில்லே. வரிகளைப்படித்ததும் கேக்கலாம் போல இருந்துச்சு.
கேட்டேன் ரசித்தேன்.
கை கோர்க்கும் போதெல்லாம் கை ரேகை தேயட்டும்
என்னை கவர்ந்த வரி சகோ ...
பகிர்குக்கு நன்றி
தமிழ் மனம் 6
sorry tamil manam not working , i will cum later
நல்ல பாடல்:நல்ல ரசனை:நல்ல பகிர்வு!
ம் ...
நல்ல பாடல். அழாகான விளக்கம். வாழ்த்துக்கள்.
எனக்கும் இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும்..
பகிர்வுக்கு நன்றி..
பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது.
சரியான தேர்வு.
வாங்க மகேந்திரன் நண்பரே
தங்கள் ரசிப்புக்கு நன்றி
வாங்க கோவை நேரம்
நாம் பாடல்களை மட்டும் ரசிப்போமே
வாங்க விடிவெள்ளி
தங்கள் வருகைக்கும் ,ரசிப்பிர்க்கும் நன்றி சகோ..
வாங்க சௌந்தர் நண்பரே
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
வாங்க லக்ஷ்மி அம்மா
தங்களின் மேன்மையான அன்பிற்கு நன்றி அம்மா
வாங்க ரியாஸ் அஹமது நண்பரே
தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும்,ரசிப்பிற்கும் நன்றி
வாங்க சென்னை பித்தன் அய்யா
தங்கள் வாழ்த்துக்கு நன்றி
வாங்க நண்டு நொரண்டு நண்பரே
தங்கள் வருகைக்கு நன்றி
வாங்க ராம்வி சகோ,
தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
வாங்க மாலதி சகோ..
தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
வாங்க கருன் நண்பரே
தங்களுக்கும் இந்த பாடல் பிடித்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
வாங்க அந்நியன் நண்பரே
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ரசிக்கும் படியான பாடல். நினைவூட்டலுக்கு நன்றி.
எல்லா திரட்டியையும் குத்தியாச்சு
வாங்க பிரகாஷ்
வருகைக்கும்,வாக்குக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
பாடல் வரிகளை படித்தபின், பாடலை கேட்பது தனிசுகம்.வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி
வாங்க சக்தி நண்பரே
தொடர்ந்து வாருங்கள்
தங்களை வரவேற்கிறேன்
வாழ்த்துக்கு நன்றி
hii.. Nice Post
For latest stills videos visit ..
www.chicha.in
www.chicha.in
Post a Comment