வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Wednesday, September 14, 2011

மலர்கள் மணக்க மட்டுமில்லை மருத்துவத்திற்கும்


நண்பர்களே வணக்கம்

பழங்கள் ,காய்கறிகள் ,கீரைகள் ,கிழங்குகள்
இவற்றைத்தொடர்ந்து மலர்கள்



பூ என்பது வாசத்திற்கும் ,அழகிற்கும் மட்டுமல்ல

அதனால் மருத்துவ பலனும் உண்டு .



முதலில் ரோஜாவை பார்ப்போம்
(அட பூவை சொன்னேங்க )

ரோஜா அனைவருக்கும் பிடித்த பூ
இதைப் பற்றி நிறைய பாடல்கள் வந்துள்ளது.

இது பல நிறங்களில் இருக்கும்


நாம் பார்க்க போவது எங்கும் பார்க்கும் ரோஸ்
நிற ரோஜாக்களை

ரோஜா மலரின் மருத்துவ குணங்கள் 

ரோஜா மலர்களின் இதழ்களை ஆய்ந்து ஒரு கைப்பிடி
அளவு காலையிலும் ,மாலையிலும் மென்று தின்று
வந்தால் இரண்டு நாட்களில் சீத பேதி முற்றிலும்
குணமாகும்.

வயிற்றுப்புண் ஆறும் .மலச்சிக்கல் நீங்கும்.
குளிர்ச்சி தரும் .



ரோஜாப்பூ குல்கந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
இரத்த விருத்தியும் இரத்த சுத்தியும் ஏற்படும்.

மலச்சிக்கல் அடியோடு அகலும்.இது உடலுக்கு
போஷாக்கு டானிக் ஆகும்.



ரோஜாப்பூ குல்கந்து தாயாரிக்கும் முறை :

ரோஜா இதழ்களை சுத்தமாக ஆய்ந்து எடுத்து ,
அதன் எடைக்கு மூன்று மடங்கு அளவு கல்கண்டு
சேர்த்து கல் உரலில் போட்டு நன்றாக இடித்தால்
லேகியம் பக்குவத்தில் மெழுகு போல் ஆகும்.

அதை வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு,
அதில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு சுத்தமான
தேனை விட்டு கிளற வேண்டும்.

இது தான் குல்கந்து .



இதனை அழுத்தமாக மூடி பத்திரப்படுத்த வேண்டும்.
இதை சிறுவர்கள் அரைக்கரண்டி காலை மாலையும்

பெரியவர்கள் ஒரு கரண்டி வீதம் காலை மாலையும்
சாப்பிடலாம் .



அடுத்ததாக

ரோஜா இதழுடன் சம அளவு சிறுபயறையும் சேர்த்து
இரண்டு மூன்று பூலாங்கிழங்கும் உடன் வைத்து விழுது
போல் அரைத்து உடலில் பூசி அரைமணி நேரம் கழித்து
வெந்நீரில் குளித்து வந்தால் ,

சரும நோய்கள தீரும்.உடல் கவர்ச்சி கரமான
நிறத்தில் மாறும்.





நண்பர்களே இந்த மலரின் மருத்துவம் பிடித்திருக்கிறதா



மலரின் மருத்துவம்
இன்னும் மலரும்...........


நன்றி


ரோஜாவின் மற்ற நிறங்கள் பார்வைக்காக



நண்பர்களே உங்கள் கருத்து !

26 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்

M.R said...

சி.பி.செந்தில்குமார் said...
ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்

இந்த பாடலை தான் நானும் உதாரணத்திற்கு போடலாம் என்றிருந்தேன் நண்பரே ஏனென்றால்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

rajamelaiyur said...

//
முதலில் ரோஜாவை பார்ப்போம்
(அட பூவை சொன்னேங்க )
//

செல்வமணி கொவித்துகொல்ல்வர்

rajamelaiyur said...

மலர்களை பற்றிய அருமையான தகவல்கள்

rajamelaiyur said...

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை ...தொடருங்கள் ...

K.s.s.Rajh said...

ரோஜாவில் இம்புட்டு மேட்டர் இருக்கா(நான் பூவைச்சென்னன்)

அருமையான தகவல்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

காதல் ரோஜாவே... எங்கே நீ எங்கே...

Learn said...

பயனுள்ள நல்ல பதிவு


தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

RAMA RAVI (RAMVI) said...

மலர்களுக்கு மணம் மட்டுமல்ல குணமும் இருக்கு என்று அழகாக சொல்லியிருக்கீங்க.
பயனுள்ள தகவல்கள்.நன்றி.

Unknown said...

பல விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன் மாப்ள நன்றி!

குறையொன்றுமில்லை. said...

ஆ மா, மலர்களுக்குள் மருத்துவ
குணங்களும் நிறம்பி தான் இருக்கு
அதை தெரியப்படுத்திய பதிவுக்கு நன்றி

சென்னை பித்தன் said...

த.ம.5

சென்னை பித்தன் said...

ரோஜா என்றும் ரோஜாதான்!

நிரூபன் said...

மலர்களைப் பற்றிய மணம் வீசும் பதிவிற்கு நன்றி நண்பா.

MANO நாஞ்சில் மனோ said...

மிக அருமையான மருத்துவமும் சூப்பரான படங்களும்...

Admin said...

பூக்களுக்கு வாசனை மட்டும் தான் உள்ளது என நினைத்திருந்தேன். மருத்துவ குணங்களும் உண்டு என்ற புதிய செய்தியை தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா!

சக்தி கல்வி மையம் said...

மீண்டும் ஒரு பயனுள்ள பதிவிற்கு நன்றி சகோ..

Yaathoramani.blogspot.com said...

தாங்கள் தருவதெல்லாம் பயனுள்ள பதிவாகவே உள்ளன
தொடர வாழ்த்துக்கள்
த.ம 11

ADHI VENKAT said...

மலர்களின் மருத்துவ குணங்களை அருமையாக சொல்லியிருக்கீங்க.

பாராட்டுக்கள். தொடருங்கள்.

kobiraj said...

தங்களின் பதிவுகள் எல்லாம் அருமை .ரசித்தேன் .ஓட்டு போட்டாச்சு

மாய உலகம் said...

மணமும், குணமும் நிறைந்த பூக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

Anonymous said...

ரோஜாவின் பல பயன்கள். நல்ல பதிவு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

மீண்டும் ஒரு பயனுள்ள பதிவிற்கு நன்றி ...ரமேஸ்

மகேந்திரன் said...

ரோஜாவை வைத்து ஒரு
மருத்துவ சாம்ராஜ்யமே படைத்துவிட்டீர்கள் நண்பரே....
அருமை....

ADHI VENKAT said...

இன்றைய வலைச்சரத்தில் – புறாவும் பூவும் – ஒரு குட்டிக்கதை….

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_15.html

உங்கள் வலைப்பூ பற்றி சொல்லியிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்….

நட்புடன்

ஆதி வெங்கட்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out