வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Wednesday, September 28, 2011

யோகா கற்றுக்கொள்ளுங்கள்-பாகம் 2



நண்பர்களே வணக்கம்

யோகா பயிற்சி முறையில் உள்ள ஆசனங்களின் வகைகளை
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்ற பதிவில் பதிவிட்டிருந்தேன் .




அதனை பற்றி விளக்கமாக பதிவிட நண்பர்கள் சொன்னதால்
யோகா கற்றுக் கொள்ளுங்கள் என்ற பதிவில் பதிவிட்டேன்
அதில் படம் இல்லை என்பதால் சற்று கடினம் புரிந்து கொள்ள
என்று நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் .

அதனால் கிடைத்த படம் போடுகிறேன் ,சில பயிற்சிக்கு
கிடைக்க வில்லையெனில் அந்த பயிற்சிக்கு என்னையே
உபயோக படுத்தி எடுத்து தருகிறேன் .

சரி நண்பர்களே கடந்த பதிவில் இரண்டு ஆசனங்களை
பார்த்தீர்கள் ,அதனுடைய படம் இன்று இணைத்துள்ளேன் .
பார்க்காதவர்கள் (படிக்காதவர்கள் )இங்கே சென்று
படித்து கொள்ளவும் .

இன்று மூன்றாவது ஆசனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ஆசனம் -3

உத்தானாசனம்

செய்முறை :-

பாதங்களை ஒன்று சேர்த்து நிற்கவும்.பின்னர் மெதுவாக 
மூச்சை உள்ளே இழுத்தவாறு கைகளைத் தூக்கவும்.

இது ஆரம்ப நிலை .

பின்னர் மூச்சை நிதானமாக வெளியே விட்டவாறு ,
உடம்பின் மேல்பாகத்தை வளைத்து குனியவும்.

பாதங்களை கைகளால் தொட்டபடி தலையை குனிந்து 
முகத்தை முழங்கால் மீது வைக்கவும்.

பின்னர் மறுபடியும் மூச்சை உள்ளே இழுத்து ,தலையை
நிமிர்த்தி ,கைகளைதூக்கி பழைய நிலைக்கு வரவும்.

இவ்வாறு 8 முறை செய்யவும்.செய்வதற்கு கடினமாக 
இருந்தால் முழங்கால்களை சிறிது மடித்து கொள்ளவும்.

பயன்கள் :-

அடி வயிற்றில் ஏற்படக்கூடிய நோய்களை நீக்கும்.ஜீரண 
சக்தியை அதிகரிக்கும்.முதுகு ,இடுப்பு வலி வராமல் தடுக்கும்.

எச்சரிக்கை :-

கழுத்து ,இடுப்பு,Disc prolapsed,முதுகு தண்டு கோளாறு 
உள்ளவர்கள் தவிர்க்கவும்.

மற்றும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்
குடல் இறக்கம் Hernia உள்ளவர்கள் தவிர்க்கவும்.


28 comments:

Unknown said...

அன்பரே!
உடல் நலத்திற்கும்
உகந்த உணவு வகைகளும், உடல்
உடற் பயிற்சி பற்றியும் எழுதும்
தங்களுக்கு நன்றி
ஓட்டுப் பதிவாக தடை ஏற்படுகிறது கவனிக்க

புலவர் சா இராமாநுசம்

Mathuran said...

மீண்டும் ஒரு பயனுள்ள பதிவு பாஸ்.. யோகாவில் உள்ள ஆசனங்கள் பற்றி தெளிவாக விளக்கியுள்ளீர்கள்

K.s.s.Rajh said...

பயனுள்ள பதிவு பாஸ் ஆர்வமுடன் படித்து வருகின்றேன்

Anonymous said...

யோகா பற்றி
நல்ல சொல்லிருக்கீங்க
செயல் முறை விளக்கமும்..
யாரெல்லாம் செய்யகூடாது என்ற
எச்சரிக்கையும் அருமை சகோ...

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ ரெண்டாவது படத்துல அவிங்க தலையை காணலை....

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க சொல்லுங்க எஜமான் நாங்க செய்யுறோம்...

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் பாஸ்,

ஆரோக்கிய வாழ்விற்கும்,
மன ஒருங்கிசைவிற்கும் வழி வகுக்கும் யோகாவின்
உத்தாசனம் பற்றிய அருமையான பதிவு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பரே, பயனுள்ள குறிப்புகள் போடறிங்க.... ரொம்ப உதவியா இருக்குங்க

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லாம் போட்டாச்சு....

சென்னை பித்தன் said...

செய்முறை விளக்கத்துடன் பதிவு நன்று.
த.ம.6

Anonymous said...

மீண்டும் ஒரு பயனுள்ள பதிவு ...படம் போட்டதுக்கு நன்றி நண்பரே...

M.R said...

புலவர் சா இராமாநுசம் said...
அன்பரே!
உடல் நலத்திற்கும்
உகந்த உணவு வகைகளும், உடல்
உடற் பயிற்சி பற்றியும் எழுதும்
தங்களுக்கு நன்றி
ஓட்டுப் பதிவாக தடை ஏற்படுகிறது கவனிக்க//

நன்றி ஐயா ,வாக்கு பதிவாகிறது ஐயா

M.R said...

மதுரன் said...
மீண்டும் ஒரு பயனுள்ள பதிவு பாஸ்.. யோகாவில் உள்ள ஆசனங்கள் பற்றி தெளிவாக விளக்கியுள்ளீர்கள்

நன்றி நண்பா

M.R said...

K.s.s.Rajh said...
பயனுள்ள பதிவு பாஸ் ஆர்வமுடன் படித்து வருகின்றேன்//

நன்றி நண்பரே

M.R said...

சின்னதூரல் said...
யோகா பற்றி
நல்ல சொல்லிருக்கீங்க
செயல் முறை விளக்கமும்..
யாரெல்லாம் செய்யகூடாது என்ற
எச்சரிக்கையும் அருமை சகோ...

கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
அய்யய்யோ ரெண்டாவது படத்துல அவிங்க தலையை காணலை....

ஹா ஹா அது முட்டிகால்கிட்ட இருக்கு நண்பரே


நீங்க சொல்லுங்க எஜமான் நாங்க செய்யுறோம்...//

சந்தோசம் நண்பரே

M.R said...

நிரூபன் said...
இனிய மாலை வணக்கம் பாஸ்,

ஆரோக்கிய வாழ்விற்கும்,
மன ஒருங்கிசைவிற்கும் வழி வகுக்கும் யோகாவின்
உத்தாசனம் பற்றிய அருமையான பதிவு.

வணக்கம் நண்பரே

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
நண்பரே, பயனுள்ள குறிப்புகள் போடறிங்க.... ரொம்ப உதவியா இருக்குங்க

நன்றி நண்பா

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
எல்லாம் போட்டாச்சு....

அப்பிடியா ,ரொம்ப சந்தோசம் நண்பா

M.R said...

சென்னை பித்தன் said...
செய்முறை விளக்கத்துடன் பதிவு நன்று.
த.ம.6

மிக்க நன்றி ஐயா

M.R said...

ரெவெரி said...
மீண்டும் ஒரு பயனுள்ள பதிவு ...படம் போட்டதுக்கு நன்றி நண்பரே...

நன்றி நண்பரே

தனிமரம் said...

மிகவும் பயன் உள்ள தகவல் 

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பயனுள்ள தொடர்.......

M.R said...

தனிமரம் said...
மிகவும் பயன் உள்ள தகவல்

நன்றி சகோ

M.R said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பயனுள்ள தொடர்.......

நன்றி நண்பரே

அம்பாளடியாள் said...

உடல் நலத்தைப் பேணிக் காக்கவல்ல பயனுள்ள பகிர்வைத் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் .
எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு ........

காந்தி பனங்கூர் said...

என் தளத்தில் முதல் தடவௌயா கருத்துரை விட்டுச் சென்றதற்கு மிக்க நன்றி. உங்கள் தளம் அருமையா இருக்கு. நல்ல தகவல்களை தருகின்றீர்கள். வாழ்த்துக்கள்.

K said...

மிக்க நன்றி இந்தப் பகிர்வுக்கு, நண்பா! தொடருங்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out