வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, June 18, 2011

புதிய வேர்ட் ஷார்ட்கட்ஸ்

Ctrl + Shift + D:தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் கீழாக இரு அடிக்கோடுகள் இடப்படும்.
Ctrl + ] : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் ஒரு பாய்ண்ட் அதிகரிக்கப்படும்
Ctrl + [ : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் ஒரு பாய்ண்ட் குறைக்கப்படும்.
Ctrl + Shift + A: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதும் கேபிடல் எழுத்துக்களாக மாற்றப்படும். மீண்டும் அதில் பயன்படுத்தினால், முந்தைய நிலைக்குக் கொண்டு வரப்படும்.
Ctrl + =: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ் சப்ஸ்கிரிப்டாக மாற்றப்படும். மீண்டும் பயன்படுத்துகையில் முந்தைய நிலைக்குக் கொண்டு வரப்படும். 
Ctrl + +: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் சூப்பர் ஸ்கிரிப்டாக மாற்றப்படும். மீண்டும் பயன்படுத்துகையில் முந்தைய நிலைக்குக் கொண்டு வரப்படும்.
Ctrl + Shift + Q: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் சிம்பல் எழுத்து வகைக்கு மாற்றப் படும். சிம்பல் எழுத்து வகைக்கு மாற்றியதை, மீண்டும் பொதுவான ஸ்டைலில் அமைக்க Ctrl + Shift + N பயன்படுத்த வேண்டும்.
ஒரு பத்தி முழுவதையும் Heading 1 styleக்குக் கொண்டு வர Ctrl + Alt + 1 அழுத்தலாம். இப்படியே இரண்டாவது, மூன்றாவது வகை ஸ்டைலுக்குக் கொண்டு வர 2,3 (Ctrl + Alt + 2, Ctrl + Alt + 3) என மாற்றி அழுத்த வேண்டும். 
வரிகளில் புல்லட் ஸ்டைல் கொண்டு வர Ctrl + Shift + L அழுத்தவும். 

2 comments:

K said...

வணக்கம் ரமேஷ் சார்!

அவசியமான தகவல்கள் சார்! புக் மார்க் செஞ்சு வைக்கிறேன்!

Mahan.Thamesh said...

பகிர்வுக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out