வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, July 18, 2011

பற்களால் அழகாகும் சொற்கள்-2 | அன்பு உலகம்

பற்களை பற்றி நேற்று பார்த்தோம் .

அதன் தொடர்ச்சியாக இன்று ......
இயற்கை வைத்தியம் பல் சம்பந்த பட்ட விசயங்களுக்கு .


பல்வலிக்கு :-

  கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு அதன் புகையை வாயில் புகைக்க பல்வலிக்கு காரணமான பூச்சிகள் இறந்துவிடும் .பல் அரணை நோயும் குணமாகும் .

கிராம்பு தைலத்தை வலியுள்ள பற்களில் தடவினால் பல்வலி குணமாகும் .
(கிராம்பு தைலம் ஈறுகளில் பட்டால் புண்ணாகும் .ஆகவே கவனமாக பல்லில் மட்டும் தடவ வேண்டும் .

உப்பை வறுத்து , கிளி கட்டி வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பல்வலி தீரும்.

துளசி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று வலியுள்ள
 இடத்தில் பத்து நிமிடம் வைத்திருந்து வெந்நீரில் வாய் 
கொப்பளித்து விட்டால் பல்வலி தீரும்


ஒரு தேக்கரண்டி மிளகும் , இரண்டு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைபோல் அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்து பத்து நிமிடங்கள் கழித்து வெந்நீரில் வாய் கொப்புளித்தால் பல்வலி தீரும் .

மாம்பூவையும் ,மாந்தளிரையும் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் வாய் கொப்புளித்தால் பல்வலி ,ஈறு வலி தீரும்.

பல் ஈறுகளில் வீக்கமும் வலியும் இருந்தால் , சுத்தமான தேனை விரலில் தொட்டு ஈறுகளில் தேய்த்து வந்தால் வீக்கமும் வலியும் குறையும் .

மிளகும் சர்க்கரையும் மைபோல் அரைத்து , வலி உள்ள இடத்தில் வைக்க வலி குணமாகும் .எச்சியை துப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.


ஏலக்காயை வாயிலிட்டு மென்று வருவதன் மூலம் பற்களில் உள்ள கரைகளை போக்கலாம் .

படிகாரத்தை  தூள் செய்து அதனுடன் இரு துளி எலுமிச்சை சாறு விட்டு பற்களை தூய்மை செய்ய பற்களின் கறைகள் நீங்கி பளபளக்கும் .

ஆலங் குச்சியால் பல் துலக்கி வர பல் வலி ,பல் ஆட்டம் நீங்கி பல் பலம் பெரும்.

கிராம்பை பொடியாக்கி பல் விளக்கும் பொடியுடன் கலந்து உபயோகிக்க பற்கள் பலம் பெரும் .ஈறுகளின் வீக்கம் குறையும் .வாய் துர்நாற்றம் தீரும்.

ஆலமர விழுதை உலர்த்தி தூளாக்கி ,அதில் எட்டில் ஒரு பங்கு அளவு கற்பூரம் சேர்த்து அவற்றுடன் வேப்பம் பட்டைத்தூள் , கடுக்காய் தூள் கலந்து பல் துலக்க பல் நோய் தீரும் .

நண்பர்களே பிடித்திருந்தால் கருத்தும் வாக்கும் பதியுங்கள் .
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் .
உங்கள் 
நண்பன் 
 ஹலோ கண்ணு தெரியாதுன்னு இத போடலீங்க ,
சும்மா ஸ்டைலுக்கு

8 comments:

மகேந்திரன் said...

அருமையான தகவல்கள் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.

பல் நோய்க்கு அதிகமாக
நம்மவர் பயன்படுத்தும்
கிராம்பு பற்றி நீங்கள் ஏதும்
குறிப்பிடவில்லையே??!!

M.R said...

நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு ,

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி .

கிராம்பு சம்பந்தமாக இரண்டு குறிப்பு கொடுத்துள்ளேன் நண்பரே .

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு யூஸ்ஃபுல். கர்ஷர் பூச்சி மாதிரி வடிவமைத்தது ரசித்தேன்

M.R said...

வாங்க சிபி நண்பரே .

வருக வருக என வரவேற்கிறேன்

RAMVI said...

சுலபமான முறையில் பல்வலிக்கு வீட்டு வைத்தியம். உபயோகமான பதிவு ரமேஷ்.

M.R said...

வருகைக்கும் ,தோழமைக்கும் நன்றி ராம்வி சகோ

ஈரோடு தங்கதுரை said...

நல்ல வைத்தியம் டாக்டர் .... ! வாழ்த்துக்கள்..! இன்னும் நெறைய கை வைத்தியம் சொல்லுங்க ...

M.R said...

வாருங்கள் தங்கதுரை நண்பரே .

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out