வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, July 23, 2011

மனம்போல் வாழ்க்கை -6


மனம்போல் வாழ்க்கை 
பாகம் –6நமது மனம் போல் வாழ்க்கை பதிவின் தொடர்ச்சியாக நாம் பார்க்க போவது,

பலவீனம் பற்றி ,

உணரப்படாத வரையில்
பலவீனம்
நமது எஜமான்
உணர்ந்து விட்டால்
நம் சேவகன் .


என்பது முன்னோர்கள் வாக்கு

யோசித்து பாருங்கள் , உங்களுடைய பலவீனங்கள் உங்களுடையது மட்டுமே.

உங்களுடைய பலவீனங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது .
அவற்றை பற்றி நீங்கள் யோசிப்பது கிடையாது  என்பதே உண்மை .

ஒருவர் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தாலும் , ஒவ்வொருவர்க்கும் ஒரு பலவீனம் இருக்கும் .

உதாரணத்திற்கு முன்கோபம் ஒரு பலவீனம் .அது திடீரென்று வெளிபடுகிறபோது அதை நம் முன்கோபம் என்று நாம் ஏற்று கொள்வதில்லை .

அதை நியாய படுத்த முயற்சிப்போம். அதற்கான காரண காரியங்களை கண்டுபிடித்து ,இன்னொருவரை அதன் இலக்காக்கி சமாதானம் தேட முயற்சிக்கிறோம் .

சில சமயங்களில் அந்த பலவீனத்தையே நம்முடைய பலம் போல் நிரூபிக்கவும் முயற்சிக்கிறோம் .

நம்முடைய பலவீனத்தை மற்றவர்களின் மீது ஏற்றி அவர்களுடைய பலவீனம் போல் காட்ட முயற்சிக்கிறோம்

இதுதான் நம்மில் பெரும்பாலோரிடம் இருக்கின்ற மிகப் பெரிய பலவீனம் .
முன்கோபம் போல் நம் ஒவ்வொருவரிடமும் வேறு எத்தனையோ பலவீனங்கள் இருக்கின்றன .

மற்றவர்களை நாம் குறை சொல்வதற்கு முன் ,அந்த குறைக்கும் 
தமக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்பதை சிந்தித்து பார்க்க
 வேண்டும். அதாவது அந்த குறை நம்மால் ஏற்பட்டதா 
என்று சிந்தித்து பார்க்க வேண்டும் .

நம்முடைய பலவீனங்கள் நாம உணர தொடங்கினால் ,அதிலிருந்து
 நாம் உடனடியாக விடுபட முடியா விட்டாலும் ,நம்முடைய குறைபாடுகளுக்கு மற்றவர்களை பலிகாடாக ஆக்கும் பழக்கத்தில் இருந்தாவது விடுபட முடியும்.


முன் கோபம் மட்டுமல்ல நம் பலவீனம் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு சந்தோசமாக வாழ பாருங்கள் .


என்ன நண்பர்களே போரடிக்கிறேனா.
இதோ முடித்து கொண்டேன் .
அதற்காக கருத்தும் வாக்கும் மறக்காதீர்கள்  நண்பர்களே நல்லா டார்ச் அடிச்சி பாருங்க டாக்டர் ,ரெண்டு நாளா ஒரே பல்வலி 
ஒரு எலும்பு கூட கடிச்சி திங்க முடியல 
(பய புள்ள ஒரிஜினல் டாக்டர் தானா ,ரொம்ப நேரமா டார்ச் 
அடிச்சி பார்க்கிறான் ,ஆனால் ஒன்னுமே சொல்ல மாட்டேன்கிரானே )

32 comments:

தமிழ்வாசி - Prakash said...

முதல் வாசம்...

தமிழ்வாசி - Prakash said...

நல்லாவே கட்டுரை இருக்கு.

தமிழ்வாசி - Prakash said...

நண்பா... நாங்களும் ஓட்டு பட்டை வச்சிருக்கோம், கொஞ்சம் கவனிச்சுக்கங்க

Reverie said...

நல்ல கட்டுரை...வாழ்த்துக்கள் நண்பரே...

M.R said...

வாங்க பிரகாஷ் ,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

Reverie said....

நல்ல கட்டுரை...வாழ்த்துக்கள் நண்பரே...

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

மாய உலகம் said...

உன்னை அறிந்தால் உலகத்தில் போரடலாம்... என்பதை அழகாக உணர்த்தியுள்ளீர்கள்... மொத்தத்தில் பிரச்சனைக்கு காரணம் நமது பலவீனமே.... முற்றிலும் உண்மை... நன்றி வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

டாகடர் போலியா .... படத்திற்கு ஏற்ற நகைச்சுவை அருமை

siva said...

முதல் வருகை அண்ணா
மிக அருமை
கடைசி போட்டோ சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ்வாசி - Prakash said...

நண்பா... நாங்களும் ஓட்டு பட்டை வச்சிருக்கோம், கொஞ்சம் கவனிச்சுக்கங்க


அடப்பாவி

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

சைக்காலஜிக்கலா யெல்லாம் எழுதறீகளே ?

ஆமா நீங்க என்ன டாக்குடரா ?
அந்த நாய்க்கு வைத்தியம் பார்க்கிறது நீங்க தானே ?

ஹ ஹ ஹா
ஹி ஹி ஹீ

Ramani said...

பலவீனங்களை பலமாக்கும் வித்தை குறித்த
உங்கள் பதிவு அருமை
நல்ல பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

M.R said...

வாருங்கள் மாய உலகம் ,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாருங்கள் சிவா , தங்கள் வருகையை வரவேற்கிறேன் .கருத்துக்கு நன்றி சகோ

M.R said...

சிபி said ....
அடப்பாவி பிரகாஷ்


விடுங்க பாஸ் ,அரசியல்ல (ப்ளாக் கில் )இதெல்லாம் சகஜம் .

M.R said...

வாங்க ஜானகிராமன்

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாருங்கள் ரமணி நண்பரே ,

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

koodal bala said...

நல்ல ஆலோசனைகள் !

M.R said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

மகேந்திரன் said...

கட்டுரை நல்லா இருக்கு நண்பரே.

M.R said...

வாருங்கள் மகேந்திரன் ,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான கட்டுரைக்கு நன்றிகள்..

M.R said...

வாங்க கருன் நண்பரே ,

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பரே

மாய உலகம் said...

nice

சென்னை பித்தன் said...

பலவீனம் பற்றிப் பலமான பதிவு

M.R said...

சென்னை பித்தன் said....

பலவீனம் பற்றிப் பலமான பதிவு


M.R said....

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

RAMVI said...

நம்முடைய பலவீனங்களை உணர்ந்து அவற்றை புறம் தள்ளிவிட்டு வாழச்சொல்லியிருக்கிரீர்கள். அருமை.

M.R said...

RAMVI said..


M.R said...

சகோதரி ராம்வி அவர்களுக்கு வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

ஆர்.சண்முகம் said...

வாவ் நல்லா இருக்கு...

ஹேமா said...

நல்லதொரு பலவீனக் கட்டுரை.பலவீனம் என்று சொல்லும்போதே எங்களோடு பிறந்த ஒரு குணம்.என்னதான் மனம் பக்குவப்பட்டு எம்மை நாம் அறிந்து வைத்துக்கொண்டாலும் உணர்வுகளை வெளிப்படுத்துப்போது எம் பலவீனம் எம்மையறியாமல் எப்போதும் முந்திவிடுகிறது.இதுதான் பலவீனத்தின் சக்தி !

M.R said...

வாங்க ஷண்முகம்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாருங்கள் ஹேமா ,

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோ...

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out