இதற்க்கு முன் மூன்று பாகம் பார்த்தோம்.
இன்று நாம் பார்க்க போவது
“ இப்பொழுது,இந்த நிமிடம் .”
ஆம் யதார்த்தவாதிகள் அனுபவித்து சொல்லும் உண்மை
இந்த நிமிடம் முக்கியமானது
மன அமைதியின் அடித்தளமே இந்த நிமிடத்தில் நாம் எப்பிடி வாழ்ந்து கொண்டிருக்கிரோம் என்பதை பொறுத்துதான் அமைகிறது.
நேற்று என்ன நடந்தது,நாளைக்கு என்ன என்ன நடக்க போகிறது என்பதை விட , நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த நிமிடம் முக்கியமானது.
நாம் நடந்து போன விசயங்களையோ, அல்லது நடக்க போகின்ற விசயங்களையோ நினைத்துக்கொண்டிருந்தால் ,தற்போது நடந்து கொண்டிருக்கின்ற விசயங்களை கவனிக்க ( உணர ) தவறிவிடுவோம்.
அதன் விளைவு நிகழ்கால நடப்புகளையும் தவற விட்டு விட்டு அதற்க்கும் வருத்தப்பட்டு கவலை,சோர்வு, ஏமாற்றம்,நம்பிக்கையின்மை ஆகியவை எந்நேரமும் நம்மை ஆட்டி படைக்க அனுமதித்து விடுகிறோம்.
நாளைய பொழுதை நினைத்து இன்றைய பொழுதை மறப்பதால் இன்றய நேரம் வீனாக்குகிரோம்.
மீண்டும் வழியுருத்தி சொல்வது என்னவென்றால் கடந்த நாட்கழும் வேண்டாம்,நாளைய கணவு வாழ்க்கையும் வேண்டாம்.
இன்றய நிஜத்தை உணர்ந்து வாழ பழகுங்கள்.
இன்று என்பது நேற்றய பொழுதில் நாளை தானே. இன்றய தினத்தைப் பற்றி நேற்று நினைத்து பார்த்திருப்பாய் .ஆனால் இன்றய பொழுதை இன்று நினைக்காமல் இருப்பது ஏன்?
நாளை நாளை என்று நாளைய தினத்தைப்பற்றி திட்ட மிடுவதிலேயே காலத்தை தள்ளினால் இன்றய நிஜம் நம்மை விட்டு போய் விடும்.
நாளைய தினத்தை பற்றி கவலை பட்டு இன்றய பொழப்பை விட்டுவிட்டால் நம் உறவு கூட நமக்கு மிஞ்சாது.
நிஜ வாழ்க்கையில் நாம் உழைக்காமல் நாளைய பற்றி திட்டமிடுதலும் கனவுலகிலும் சஞ்சரித்துகொண்டிருந்தால் , காலமும் கடந்து போய் எதுவும் மிஞ்சாமல் எல்லாம் இழந்து மன நிம்மதி இழந்து தவிப்போம்.
மன நிம்மதி இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை,சந்தோசமும் இல்லை
இந்த நிமிடம் மறந்து எதிர்காலம் நினைக்கயில் பயம் வருகிறது.
பணம் பற்றாகுறை,குழந்தைகளை பற்றிய பயம் வருகிறது. பயம் வந்தால் படபடப்பு ,புத்தியில் நிதானம் இல்லாமை எல்லாம் வருகிறது.
வந்தால் உடலை பாதிக்கிறது. மேலும் மனம் பாதிப்படயும்.
பயம் போக கடந்து போன நாளும் வேண்டாம்,நாளைய பற்றிய பயமும் வேண்டாம். இன்றய நிஜம் போதும்.
இந்த நிமிஷம் சந்தோசமாக இரு..
அது ஒன்றே வாழ்க்கை சிரக்க வழி.
தொடரும்…… உங்கள்
நான் இந்த நிமிடத்தை மட்டுமே நினைப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
நண்பர்களே வழக்கம் போலத்தான் நான் வேற என்ன சொல்ல போறேன்.
பிடித்திருந்தால் கருத்தும் ஓட்டும் மட்டுமே நண்பர்களே
0 comments:
Post a Comment