வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Wednesday, July 20, 2011

முடியும் உன்னால் முடியும்


முடியும்
உன்னால்
முடியும்


கருவிலேயே
ஜெயித்தவன்(ள்) நீ


ஆம் ....
உன்னுடன் வந்த
லட்சக்கணக்கான
உயிரணுக்களை
பின்தள்ளி
நீ மட்டுமே
உன் தாயின்
கருவறைக்கு
சென்றவன்(ள்)
ஆதலால்
கருவிலேயே
ஜெயித்தவன்(ள்)
நீ


முடியும்
உன்னால்
முடியும்

தோல்விகளை
கண்டு
மனம் தளராதே
தோல்விகளே
உனது அனுபவம்
அதுவே உனக்கு
ஆசான் .


முயலும்
ஜெயிக்கும்
சமயத்தில்
ஆமையும்
ஜெயிக்கும்
ஆனால் ...
முயலாமை
என்றுமே
ஜெயித்தது இல்லை .



இன்று மாபெரும்
வெற்றி பெற்றவர்கள்
ஒவ்வொருவரும்
பல தோல்விகளை
சந்தித்தவர்களே

திட்டமிட்ட பின்
செயல்பட தொடங்கு
செயல்பட தொடங்கிய பின்
திட்டமிடாதே
 முடியும்
உன்னால்
முடியும் 

முயன்றால்
எதுவும்
உன்னால்
முடியும்  













சரி நண்பர்களே பிடித்திருந்தால் கருத்து சொல்லுங்கள் நண்பர்களே .

நன்றி .

22 comments:

இராஜராஜேஸ்வரி said...

அன்பு உலகத்தின் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வாழ்க வளமுடன்!!

M.R said...

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி மேடம்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அழகான மற்றும் புத்துணர்வை ஏற்ப்படுத்தும் தன்னம்பிக்கை வரிகள்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
இன்று மாபெரும்
வெற்றி பெற்றவர்கள்
ஒவ்வொருவரும்
பல தோல்விகளை
சந்தித்தவர்களே//////


உண்மையான வரிகள் தோல்விகள் இல்லாமல் வாழ்க்கை ஏது...

M.R said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

மகேந்திரன் said...

தன்னம்பிக்கை கொடுக்கும்
உற்சாகக் கவிதை
அருமையாக உள்ளது தோழரே

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

நல்லதொரு ஊக்கம் தரு கவிக்கு வாழ்த்துக்கள்

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

M.R said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேந்திரன் நண்பரே


வாருங்கள் ஜானகிராமன் நண்பரே ,
தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே

இமா said...

கருத்து மிக்க கவிதைவரிகள். பாராட்டுக்கள்.

(ஆமையும் முயலும் படம் அழகு.) ;)

M.R said...

முதன் முதலாக எனது தளத்திற்கு வருகை தந்திருக்கும் இமா சகோ... விற்கு நன்றி .

தொடர்ந்து வாருங்கள் சகோ ...
நன்றி

மாய உலகம் said...

தன்னம்பிக்கை தூண்டும் தத்துவ வரிகள் தூள்..... பாராட்டுக்கள்

மாலதி said...

நம்பிக்கையூட்டும் வரிகள் தொடர்க ...........

M.R said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாய உலகம்

M.R said...

வாருங்கள் மாலதி சகோ..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தலான வார்ஹ்தைகளின் சங்கமம் ..
பாராட்டுக்கள்..

M.R said...

வாங்க கருன் நண்பரே வாழ்த்துக்கு நன்றி .

RAMVI said...

தன் நம்பிக்கையும் விடா முயற்சிய்ம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதை கவிதையில் அழகாய் சொல்லியிருக்கீங்க, வாழ்த்துக்கள்

M.R said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராம்வி .

தமிழ்வாசி - Prakash said...

தன்னம்பிக்கை வரிகள்.. உங்களாலும் முடியும் நண்பரே...

M.R said...

நன்றி பிரகாஷ் நண்பரே

Ramani said...

சூப்பர் பதிவு
படங்களும் அதற்கு விளக்கம் போல் அமைந்த
கவிதைகளும் அருமை
குறிப்பாக முயலாமை மிக மிக அருமை
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

M.R said...

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி ரமணி நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out