வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, July 30, 2011

மனம் நினைத்தால் பணம் சம்பாதிக்கும்

தன்னம்பிக்கை தொடர்

நண்பர்களே வணக்கம் ,தங்களின் தொடர் ஆதரவிற்கு
 என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்


நண்பர்களே நான் ஏற்கனவே மனம் போல் வாழ்க்கை என்ற
தொடர் எழுதி இருந்தேன் .

அது மனதை சந்தோசமாக வைத்துக்கொண்டு டென்ஸன் 
இல்லாமல் வாழ்வதற்கு .

இந்த தொடர்

மனதை நம் வசப்படுத்தினால் பணம் சம்பாதிக்கலாம்


என்ற குறிக்கோளைக் கொண்டது .

இந்த தொடரை படிப்பதோடல்லாமல், கடைப்பிடித்தும் பாருங்கள் ,
வெற்றிக் கிட்டும் .

பாகம் –ஒன்று

நம் எண்ணம தான் எல்லா செயல்களையும் செய்கிறது .

நீங்கள் என்ன நினைகிறீர்களோ அது நடக்கும் .ஆனால்
திட்டவட்டமான குறிக்கோளுடன் அதைப் பற்றியே உங்கள்
எண்ண அலைகள்  ஓய்ந்து போகாமல் நினைத்து கொண்டே
இருந்தால் ,உங்கள் எண்ணம்  நிறைவேறும் .

வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் உங்கள் மனதில்
எதில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ 
அந்த எண்ணம் உங்கள் மனதில் தீ போல் கொழுந்து விட்டு
எரிய வேண்டும் .
அந்த தீ உங்களை புடம் போடும்


உங்களுக்கே தெரியும் டாக்டர் அப்துல்கலாம் என்ன 
சொல்லியிருக்கிரார்னு .

கனவு கான் .

அப்பிடின்னா என்ன திரை நடிகைகளையும் ஆசை 
நாயகிகளையும் கனவில் கண்டு கொண்டிரு என்று அர்த்தமா .

இல்லை நண்பர்களே இல்லை ,

நாம் என்னவாக வேண்டும் என்று நீ எண்ணுகிராயோ அதற்காக இப்பொழுதே நீ கனவு கான்.

இந்த நேரத்தில் ,இந்த நாளில் நான் இது போல் ஆகி விடுவேன்
என்று இப்பொழுதே கனவு கான் என்று அர்த்தம் .

பணம் சம்பாதிக்க வேண்டுமா ,சிறந்த தொழிலதிபராக வேண்டுமா
உங்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் அதை அடைய நீங்கள் 
செய்ய வேண்டிய முதல் காரியம்

அந்த எண்ணத்தை உங்கள் மனதில் தீ போல் கொழுந்து விட்டு 
எரிய செய்ய வேண்டும் .

ஒருவர் ஒரு செயலுக்காக நிஜமாகவே தயாராகும் 
சமயத்தில் அந்த செயல் அவருக்கு சாதகமாக நிகழ்கிறது

ஒரு காரியத்தில் இறங்குகிறோம் ,தோல்வி ஏற்படுகிறது .
என்ன செய்கிறோம்? உடனே ஒரு தீர்மானத்திற்கு வருகிறோம்
.இது நமக்கு சரிபட்டு வராது என்று.

தற்காலிக தோல்விகளை கண்டு துவண்டு போகக் கூடாது 
இந்த தவறை ஏதாவது ஒரு சந்தர்பத்தில் எல்லோருமே செய்கிறோம் .

இதைப்பற்றி ஒரு உதாரணத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்

நண்பர்களே இந்த தொடரில் சில கடைபிடிக்க வேண்டிய 
கட்டளைகள் இருக்கு .அதை பின்பற்றினால் பணக்காரனாவதுஉறுதி 

தொடரை பின்பற்றி ,படித்து செயல்படுத்தி பார்த்து விட்டு 
உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள் .

அது என்னவென்று பின்வரும் தொடர்களில் சொல்கிறேன் 
நண்பர்களே.

உங்கள் நண்பன்
எம் ஆர்
 .


நண்பர்களே படித்துவிட்டு பிடித்திருந்தால் கருத்தை சொல்லுங்கள்

பிடித்திருந்தால் வாக்கிட்டு இத்தொடர் மற்றவரையும் சென்றடைய செய்யுங்கள் நண்பர்களே .


நான் தரையில நடந்தா நத்தை
பைக்கில பறந்தா வித்தை 


18 comments:

மாய உலகம் said...

ஆஹா தன்னம்பிக்கை தொடர்.. தொடருங்கள் தொடருகிறோம்... வாழ்த்துக்கள்

M.R said...

வாங்க மாய உலகம் ,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

Anonymous said...

நல்ல நடை..வாழ்த்துக்கள்..

athira said...

அழகான கருத்துக்கள் ரமேஸ். தொடருங்கள், ஆனா இதைக் கடைப்பிடித்து எமக்குப் பணம் கிடைக்கவில்லையாயின்... உங்களுக்குச் ”சங்கிலி” வரும் ஓக்கேயா?:)))))

மாசிலா said...

Good post. Thanx for all these advices.

மாய உலகம் said...
This comment has been removed by the author.
மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

கூடல் பாலா said...

எனக்கு பிடித்த டாப்பிக் ......தொடருங்கள் ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரைட்டு... நடத்துங்க... உங்க தொடரை... நாங்களும் தொடர்றோம்...

மகேந்திரன் said...

தன்னை ஏற்றுவிக்கும்
தன்னம்பிக்கை தொடர்.
அருமையாக உள்ளது நண்பரே.
தொடருங்கள்.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல தகவல்கள்,தொடர்ந்து எழுதுங்கள் ரமேஷ்.

Unknown said...

nanri ...
vaalthukkal ...
plz continue

ஹேமா said...

நல்ல விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்கள் !

Anonymous said...

நல்லதொரு தன்னம்பிக்கை தரும் தொடராக இருந்திடும் என்று நம்புகிறேன்....

நிரூபன் said...

அருமையான ஆரம்பம், கனவுகளைப் பற்றிய விரிவான விளக்கத்தோடு, எம் எதிர்காலம் பற்றி நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும் எனும் கருத்துக்களோடு பதிவினைத் தொடங்கியிருக்கிறீங்க. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

M.R said...

வாங்க reverie வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

வாங்க ஆதிரா தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ

வாங்க மாசிலா தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பரே ,தொடர்ந்து வாருங்கள் நண்பரே .

வாங்க பாலா தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

வங்க பிரகாஷ் ,தொடருங்கள் நண்பரே வரவேற்கிறேன் .

வாங்க மகேந்திரன் நண்பரே ,தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க ராம்வி ,வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோதரி


வாங்க ரியாஸ் அஹமது தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

வாங்க ஹேமா ,தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ..


வாங்க நிசி கண்டிப்பாக உங்கள் நம்பிக்கை வீண் போகாது நண்பரே

வாங்க நிருபன் ,தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .தொடர்ந்து வாருங்கள் நண்பரே

நிறம் மாறாத உறவுகள் - தொலைக்காட்சி தொடர் said...

அருமையான கட்டுரை...தொடரட்டும்...உங்கள் பணி.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out