நாம் உருவாக்கும் பைல்களை அல்லது தகவல்களை ஒரு கோப்பில் ( பைலில் ) போட்டு வைப்போம் . அது பொதுவான விசயமாக இருக்கலாம் .ரகசியமானதாகவும் இருக்கலாம் .
அது ரகசியமாக வைக்க வேண்டுமென்றால் என்னசெய்வீர்கள் .கோப்பை (பைலை )ரகசிய எண்கள் கொண்டு பூட்டி வைக்கலாம் .அப்படி பூட்டி வைத்தாலும் நமக்கு நெருங்கியவர்கள் பூட்டை திறக்க சொன்னால் நமக்கு தர்ம சங்கடம் ஆகும் .
அதற்க்கு என்ன செய்வது .
கோப்பு (பைல் ) அவர்கள் கண்களுக்கு தெரிந்தால் தானே அதை அவர்கள் பார்க்க விரும்புவார்கள் .அதை மறைத்து வைத்தால் எப்படி இருக்கும் .
அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்
கம்ப்யுட்டரின் எலியை (மவுசை ) வலது புறம் கிளிக் செய்து வரும் பெட்டியில் புதிய (நியு )என்ற வாய்ப்பை கிளிக் செய்து புதிய கோப்பை (பைலை ) உருவாக்குங்கள் .
அதற்க்கு பெயர் குடுக்கும்பொழுது alt+255என்ற பட்டனை கிளிக் செய்து என்டர் பட்டனை தட்டுங்கள் .
கோப்பிற்கு கீழே வரும் கோப்பிற்கான பெயர் மறைந்து போகும் .
பிறகு அந்த கோப்பின் மீது வலதுபுறம் கிளிக் செய்து வரும் காலத்தில் (பெட்டியில் ) ப்ராபர்டீஸ் என்பதை கிளிக் செய்யவும் .செய்தவுடன் வரும் பெட்டியில் கஷ்டமைஸ் என்ற எழுத்தை கிளிக் செய்யவும் .பின்னர் வரும் பெட்டியில் சேன்ஜ் ஐகான் என்ற சுட்டி (எழுத்தின் ) மீது கிளிக் செய்து வரும் பெட்டியில் காலியான ( எம்டி ) இடத்தை கிளிக் செய்யவும் .செய்தால் கோப்பு மறைந்து போகும் .
நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய விஷயத்தை ( போட்டோ , வீடியோ , தகவல்கள் ) கோப்பில் மறைத்து வைத்தபின் கோப்பை மறைத்து வைக்கவும் .
இனி மற்றவர்கள் பார்க்காமல் நமது ரகசியங்களை மறைத்துவைக்கலாம்.
எச்சரிக்கை ;-
மறைத்து வைத்த கோப்பை எங்கே வைத்தோம் என்று நீங்கள் மறந்து விடாதீர்கள் .
நண்பர்களே இதை பயன்படுத்தி பாருங்கள் .பிடித்திருந்தால் உங்கள் மேலான கருத்தை கூறுங்கள் .
முடிந்தால் ஓட்டு பெட்டியில் வாக்களியுங்கள் .
0 comments:
Post a Comment