வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Tuesday, July 26, 2011

அணைகளையும் பார்த்தாச்சு ..அப்புறம்?

நண்பர்களே ஊர் சுத்த போறோம்ல இன்னிக்கி ....
தமிழக சுற்றுலா தளங்களில் ஒன்று அணைக்கட்டுகள்

ஆழியாறு அணை

ஆழியாறு அணை ஆழியாறு ஆற்றின் குறுக்கே 1962ஆம்
 ஆண்டு கட்டப் பட்டது .

இது கோயம்புத்தூரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் 
வால்பாறை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

     ஆழியாறு அணை அருகே பூங்கா, நீர்காட்சியகம்தீம்பார்க்
 போன்றவை அமைந்துள்ளன. 


அம்பரம்பாளையம் தர்கா 
ஆழியாற்றின் கரையில் அமைந்துள்ளது.

                                                                                                                                  

கல்லணை 


இடம்
இது திருச்சிக்கு அருகே காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.

வரலாறு
தமிழகத்தில் உள்ள பழமையான அணைகளுள் முக்கியமானது
 கல்லணை ஆகும்.
இந்த அணை சோழ மன்னன் கரிகாலனால் கிபி ஒன்று 
அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

சர். ஆர்தர் காட்டன், கரிகாலன் கட்டிய இக்கல்லணையை
 "மகத்தான அணை" (Grand Anicut) என்ற பெயர் சூட்டி அழைத்தார்.
     கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை
 கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் 
பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.

மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.

    பரப்பளவு

 கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை
 உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து
 வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.

அதிசியம்

கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 
ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி
 வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம்
 ஒன்று கட்டப்பட்டது.பவானி சாகர் அணை     


  மேட்டுப்பாளையத்திலிருந்து வடகிழக்கில் 36 கிலோ மீட்டர் தொலைவில் இந்த
 அணை அமைந்துள்ளது

 சத்தியமங்கலத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரி ஆற்றின் துணை ஆறாகிய
 பவானி ஆற்றின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது.

 பவானி சாகர் அணையில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது.

. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது.

வைகை அணை 
வைகை அணை தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டிக்கு
அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வைகை அணையின்
உயரம் 71 அடியாகும்.

     
மதுரை போடிநாயக்கனூர் ரயில் பாதையில் ஆண்டிப்பட்டி ரயில்
நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவில் அமைந்துள்ளது இந்த அணை.
மதுரையில் இருந்து 69 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

மதுரையில் இருந்து இங்கு சென்றடைய பெரும் எண்ணிக்கையில்
பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளில் வைகை அணை மின்விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும்

மேட்டூர் அணை
மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும்.
இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.

மேட்டுர் அணை உருவாகிய வரலாறு

 1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது;
அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
பின்பு 1835 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.
     1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட 
விவசாயிகள் எடுத்து விளக்கினர்.

அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார்.
அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே.

மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் 
மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.

(அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது )

வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார். 

     அணை குறித்த திட்ட ஆய்வு பணி 1905ல் துவங்கி 1910 வரை நடந்தது. இறுதியில் மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்து, 1924 மார்ச் 31ம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, டிச.11ம் தேதி அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி, 1925 ஜூலை 20ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

     தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினியர் எல்லீஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமையர், முதன்மை தலைமை இன்ஜினியர் முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியை தொடங்கியது.     மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
1934ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டு
கட்டுமானப் பணி நிறைவு பெற்றது.

அணையைக் கட்டி முடிக்க அப்போது ஆன செலவு ரூ.4.80 கோடியாகும்.
அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என வைத்தனர்


அணைகளையும் பார்த்தாச்சு .......அப்புறம்? 

14 comments:

id said...

அன்னையின் மேல் ஆசை பார்த்திருக்கிறேன்...அணை மேலுமா?

சிறப்பு...வாழ்த்துக்கள்...

Reverie

# கவிதை வீதி # சௌந்தர் said...

எல்லாத்தையும் ஒண்ணு ஒண்ணா பாத்துட வேண்டியதுதான்...நல்லது...

koodal bala said...

ஒர்கிங் டேயில் ஒரு பிக்னிக் ....ஜோர் !

மகேந்திரன் said...

கல்லூரி நாட்களில் தோழர்களுடன் பயணம்
செய்த இடங்களை கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள்.
திரும்ப போய் வந்த சந்தோசம்.

RAMVI said...

தகவல், படங்கள் அனைத்தும் அருமை. தமிழ்நாட்டிலுள்ல அத்தனை அணைகட்டுகளையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவிட்டீங்க, ரமேஷ். பகிர்வுக்கு நன்றி.

M.R said...

நன்றி reverie

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

வாங்க சௌந்தர் ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க பாலா ,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க மகேந்திரன் நண்பரே

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

உங்கள் சந்தோசமே என் சந்தோசம்

M.R said...

வாங்க ராம்வி ,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..

! ஸ்பார்க் கார்த்தி @ said...

அணைக்கட்டு நாயகன் என்ற பட்டத்தை தங்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறேன்,,,,, வளர்க உங்கள் எழுத்து பணி

M.R said...

வாருங்கள் கார்த்திக் ,தங்களை வரவேற்கிறேன் .

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

தமிழ்வாசி - Prakash said...

அணைகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

M.R said...

வாங்க பிரகாஷ் ,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out