வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, July 25, 2011

ஊரு சுத்த போறேன் நீங்களும் வர்றீங்களா -2| அன்பு உலகம்


கொல்லி மலை தொடர்ச்சி ......

சதுரகிரி :-

நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின்
 இதற்குச் 'சதுரகிரி' என்ற பெயர் வந்தது.
சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில்
 அமைந்துள்ளது.



அறப்பளீஸ்வரர் கோவில் 




. இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்'
என்ற பெயர்களாளும் இறைவியார் தாயம்மை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.


அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று.

இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது. இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் 
விளங்குவதாக ஐதீகம்.



இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.
 எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து
அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில்
 இருந்து வந்துள்ளது.

இதன் பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.
 அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா
 மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலை வல்வில் ஓரி கட்டியதாக கூறப்படுகிறது. 
உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல 
முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் 
செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார்.

பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர், சம்பந்தர் 
ஆகியோர் பாடியுள்ளார். கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண 
கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான 
நூலைப் பாடியுள்ளார்.

அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.
இம் மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை.  


ஆகாய கங்கை அருவி 

கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் 
ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது.


600 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த 
பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.

இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760 படிகட்டுகள் கீழிறங்கிச் 
செல்ல வேண்டும். படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. 

முருகன் கோவில் 

     அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற 
பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில்அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர்தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.


வியூ பாயிண்ட்


     சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் வியூ 
பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன


வல்வில் ஓரி விழா

     
'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி
 உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல்
 வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது.

வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் 
ஓரி விழா கொண்டாடப்படுகிறது.

வாசலூர்பட்டி படகுத் துறை

     தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி
 படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்


அன்னாசி பழ ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் இங்கு தமிழக
 அரசால் அமைக்கப்பட்டுள்ளது


கொல்லி மலையில் அதிகளவில் அபூர்வ மூலிகைகள் 
கிடைக்கின்றன. சித்த வைத்தியத்திற்கு இந்த 
மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன.

இம்மலையில் சித்தர்கள் பலர் வாழ்ந்து, நோய் தீர்க்கும் 
மருந்துகளை கண்டறிந்து கொடுத்துள்ளனர்.

நன்றி நண்பர்களே தொடர் ஆதரவிற்கு 









என்ன பண்றீங்க ?

அன்பு உலகம் -னு
ஒரு ப்ளாக் .அத படிச்சிகிட்டு இருக்கேன் .

அப்பிடியா , அதில என்ன விசயமா 
சொல்லியிருக்காரு 

குறிப்பிட்ட ஒரு விஷயம்-னு இல்லாம 
எல்லாம் கலந்து போடறார் .

இயற்கை மருத்துவம் ,நகைச்சுவை ,கவிதை 
காணொளி .கணினி இப்பிடி எல்லாம் 
கலந்து பதிவிடுகிறார் .

இன்னிக்கி மலையை பத்தி போட்டிருக்காரு 

(ஹி ஹி விளம்பரம் இல்லீங்கோ ,சும்மா ஒரு தகவலு ,
புதுசா வரவங்களுக்கு )

16 comments:

மாய உலகம் said...

முதல் பக்தனும் நானே முதல் பயணியும் நானே

மாய உலகம் said...

ஆதிவாசிகள் மடிக்கணினி பயன்படுத்துவது போல் உள்ளது அருமை

Yaathoramani.blogspot.com said...

படங்களும் பதிவும் அருமை
நீங்கள் அன்பு உலகம் பிளாக் குறித்து
தகவல் தெரிவித்ததுடன் லிங்க் கும்
சேர்த்துக் கொடுத்திருக்கலாமோ?
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

உங்கள் பதிவுகள் எனக்கு எப்போதும் பிடிக்கும்
அதனால் எனது ஓட்டை பதிவு செய்துள்ளேன்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

http://jaghamani.blogspot.com/2011/06/blog-post_06.html//

கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்

மூன்றாம் கோணம் வலைப் பத்திரிகை நடத்திய பரிசுப் போட்டியில் முதல் பரிசு பெற்றுக் கொடுத்த கட்டுரை.

மகேந்திரன் said...

சதுரகிரி மலை பற்றிய தெளிவான கண்ணோட்டம் கிட்டியது
உங்கள் படைப்பை படித்த பிறகு.
நன்றி.

கவி அழகன் said...

கலக்கிறிங்க பாஸ்

RAMA RAVI (RAMVI) said...

தெரிந்த இடம் தெரியாத தகவல்கள். புதிய விவரங்களுக்கு நன்றி.படங்கள் அருமை.

M.R said...

வாங்க மாய உலகம் ,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

வாருங்கள் ரமணி நண்பரே ,

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க ராஜேஸ்வரி மேடம் ,
கருத்துக்கு நன்றி மேடம் .

M.R said...

வாருங்கள் மகேந்திரன் நண்பரே .

தங்களின் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க கவி அழகன்

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க ராம்வி சகோ...

தங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out