இதயமே இதயமே
நமது உடலில் இதயம் மிகவும் முக்கியமானது. இதய துடிப்பு நின்று போனால் உடல் மண்ணிற்க்கு.
நமது எண்ணம் இதயத்தை தொடும். அது வேகமாக துடித்தாலும் ,மெதுவாக துடித்தாலும் பாதிப்பே.
இதயம் எவ்வளவு இன்றி அமையாதது என்று அனைவருக்கும் தெரியும்.
இதயம் பாதிப்படைவதற்க்கு என்னென்ன காரணம் என்று பார்ப்போமா.
ஓய்வில்லாத உழைப்பாலும், போதுமான உறக்கம் ( தூக்கம் ) இல்லாமையாலும் , மது பழக்கத்தாலும் , காரசாரமான மாமிச மசாலா உணவு முறைகளாலும் இதய நோய் வரலாம்.
உயர் இரத்த அழுத்தம் , குறைவான இரத்த அழுத்தம் , இதயத் தசையிலும் , இதய குழாயிலும் கொழுப்பு அடைதல் போன்றவையே இதய நோய்களில் அதிகம் காணப்படுவது.
உயர் இரத்த அழுத்தம் அளவுக்கு மேல் கூடுமானால் உணர்வு இழந்து, கை கால் செயலிழந்து , மூளையின் இரத்த நாளங்கள் வெடிக்கவும் வாய்ப்புண்டு.
ஆகவே இரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்து கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது நல்லது.
நண்பர்களே நாம் அடுத்த பதிவில் இதயத்தை பற்றி ( இதய நோய்கள் , இதய நோய் வராமல் இருக்க உணவு முறைகள் , இதய நோய்க்கான இயற்க்கை மருந்துகள் ) பார்ப்போம் .
தங்கள் கருத்து என்னை ஊக்கபடுத்தும் நண்பர்களே.
உங்கள் நண்பன்
இயற்கையின் இதயம் பார்க்க அழகு யாரும் தொடாததால்
2 comments:
பகிர்வுக்கு இதயம் நிறைந்த நன்றி.
இயற்கை இதயம் அழகு.
இராஜராஜேஸ்வரி said...
பகிர்வுக்கு இதயம் நிறைந்த நன்றி.
இயற்கை இதயம் அழகு.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ….
Post a Comment