மற்றொருவர் :- ஆமாங்க , ஆண்குழந்தை
ஒருவர் :- என்ன பேர் வச்சிருக்கீங்க
மற்றொருவர் :-லோராண்டி
ஒருவர் :- என்ன பேர்யா இது
மற்றொருவர் ;-என்ன இப்பிடி கேட்டுபுட்டிங்க , சித்தர் பாடல்களிலேயே வந்திருக்கே
ஒருவர் :- என்னது?
மற்றொருவர் :- நந்தவனத்தி " லோராண்டி "
===============================================
கோர்ட்டில் ஒரு வித்தியாசமான விவாகரத்து வந்தது .
அதை விசாரிக்க கோர்ட் கூடியது '
வாதி கணவன் , பிரதிவாதி மனைவி .
கணவன் விவாகரத்து கேட்டிருந்தான் ,
மனைவி தன கணவன் மீது புகார் கூரியிருந்தாள் தன் கணவன் தன் மீது அபாண்டமாக பழி போட்டு விவாகரத்து கேட்கிறார் என்று .
நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க அரசாங்க வக்கீலை குறுக்கு விசாரணை செய்ய சொன்னார்.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்மணியிடம் ஆரம்பித்தார் .
வக்கீல் :-" அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சனை "
பெண் :- " அடுப்படியில் பிரச்சனை எதுவும் இல்லைங்கோ "
வக்கீல் :- " ப்ச் , உங்களுக்கிடையில் என்ன தகராறு "
பெண் ;-" எங்க கடையில தகராறு எதுவும் இல்லைங்களே ,நல்லாத்தானே ஓடுது
வக்கீல் :- " அடடா , உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று கோர்டில் சொல்லுங்க "
பெண் :- தாம்பரத்திலே எங்களுக்கு உறவுக்காரங்க யாரும் இல்லீங்க , இருந்தாத்தானே சங்கடம் "
வக்கீல் :- சரி அத விடு , கருத்து வேறுபாடு உண்டா ,"
பெண் :- நானும் கருப்பு தான் , அவரும் கருப்பு தான் .வேறுபாடு ஏதும் இல்லீங்க "
பெண் :- " வீட்டு காரரோட எதுக்குங்க சண்டை,மாசமான ஒண்ணாந்தேதி அவரு வாடகையை வாங்கிட்டு அவுரு போயடுவாருங்களே"
வக்கீல் :- " அய்யோ ,உன் புருஷன் எதுக்கு விவாகரத்து கேட்கிறார்
பெண் :- " அதுங்களா அவரு என்கிட்டே பேசரப்பெல்லாம் ரத்தகொதிப்பு வந்திடுதாம் " . இப்ப இவ்வளவு நேரம் நீங்க என்னிடம் பேசினீங்களே , உங்களுக்கு இரத்த கொதிப்பா வந்துடுச்சு , இது அபாண்டந்தானே "
நீங்களே சொல்லுங்க வக்கீல் ஐயா என்று கேட்டாள் , பிரசர்க்கு மாத்திரை முழுங்கி கொண்டிருந்த வக்கீலைப்பார்த்து .
வக்கீல் :-ஐயோ ஆள விடு சாமி ( வக்கீல் தலை தெறிக்க ஓடுகிறார் )
====================================================
சிரிச்சீங்களா நண்பர்களே
சிரிச்சவங்க சொல்லிட்டு போங்களேன்
சிரிப்பு வரலேன்னாலும் சொல்லிட்டு போங்களேன் நண்பர்களே
M.R
11 comments:
சிரித்தோம். பிரசர் மாத்திரை முழுங்கிய வக்கீலுக்கு அனுதாபங்கள்.
இராஜராஜேஸ்வரி said...
சிரித்தோம். பிரசர் மாத்திரை முழுங்கிய வக்கீலுக்கு அனுதாபங்கள்.
தங்கள் அன்பிற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் மேடம்
வணக்கம் நண்பரே,
இந்த மாதிரி மனைவி அமைஞ்சா ?
சூப்பர் காமெடி..
ரத்தக் கொதிப்பு...
அருமை..
வாழ்த்துக்கள்..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
வணக்கம் தோழரே,
ஒரு வேண்டுகோள்
கருத்துரைக்க வருபவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய இந்த WORD VERIFICATION OPTION ஐ BLOGGER SETTINGS லிருந்து நீக்கிவிடுங்களேன்.
நன்றி.
ஹா ஹா ஹா 2 செம
சிவ.சி.மா. ஜானகிராமன் said...
வணக்கம் நண்பரே,
இந்த மாதிரி மனைவி அமைஞ்சா ?
சூப்பர் காமெடி..
ரத்தக் கொதிப்பு...
அருமை..
வாழ்த்துக்கள்..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
வணக்கம் தோழரே,
ஒரு வேண்டுகோள்
கருத்துரைக்க வருபவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய இந்த WORD VERIFICATION OPTION ஐ BLOGGER SETTINGS லிருந்து நீக்கிவிடுங்களேன்.
நீக்கி விட்டேன் நண்பரே
சி.பி.செந்தில்குமார் said...
ஹா ஹா ஹா 2 செம
வாருங்கள் வரவேற்கிறோம் ,வாழ்த்துங்கள் வளர்கிறோம்
சிரிப்ப வரவைக்கறது பெரிய விஷயமுங்க..உங்க பதிவு அருமை நன்றி!
விக்கியுலகம் said...
சிரிப்ப வரவைக்கறது பெரிய விஷயமுங்க..உங்க பதிவு அருமை நன்றி! நன்றி நண்பரே
அட நல்லாருக்கே... படத்துல use பண்ணிட போறாங்க
Post a Comment