வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, July 15, 2011

முக்கியமானது தெரிஞ்சிக்காம விட்டுட்டியே

சாமியார் ஒருவர் ஆன்மீக வேலையாக ஒரு ஊருக்கு செல்ல வேண்டிருந்தது .அதற்க்கு ஒரு ஆற்றை கடந்து செல்ல வேண்டி வந்தது .அதற்காக ஒரு பரிசல்காரனை அழைத்துக்கொண்டு பரிசலில் போகிறார் .
                                                                   


பரிசல் சிறிது தூரம் செல்ல ஆரம்பித்ததும் அந்த சாமியார் அந்த பரிசல் காரனை பார்த்து கேட்கிறார் .


" உனக்கு திருக்குறள் தெரியுமா ?" என்று கேட்டார் .


பரிசல்காரன் :- "தெரியாதுங்க சாமி "


சாமியார் :- " உன் ஆயுளில் கால்வாசி வேஸ்ட் "


பரிசல்காரன் : ( மௌவுனம்  )







சாமியார் :-  "உனக்கு தேவாரம் திருவாசகம் தெரியுமா ?"


பரிசல்காரன் :- " தெரியாது சாமி "


சாமியார் :- " உன் ஆயுளில் பாதி வேஸ்ட் "


பரிசல்காரன் : ( மௌவுனம் )


சாமியார் :- " உனக்கு பகவத்  கீதை தெரியுமா  "


பரிசல்காரன் :- சற்றே எரிச்சலாக " தெரியாது சாமி "


சாமியார் :- உன் ஆயுளில் முக்கால் வாசி வேஸ்ட் " என்றார் கர்வத்துடன்


பரிசல்காரன் : "சாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா "


சாமியார் :- தெரியாது 


பரிசல்காரன் :- உங்க ஆயுசு முழுசும் வேஸ்ட் 


சாமியார் :- என் அப்பிடி சொல்ற 


பரிசல்காரன் : இந்த பரிசல் பத்து நிமிடத்திற்கு முன்னாடி ஓட்ட விழுந்துடிச்சி ,இன்னும் கொஞ்ச நேரத்தில பரிசல் முழுக போவுது . இங்க ஆழம் வேற அதிகம் . அதான் சொன்னேன் 


சாமியார் ; ' ??????????????????????????"


                                                                  


கருத்து : வாழ்க்கைக்கு அத்தியாவசமான விசயத்த முதலில் தெரிந்துகொள் .மற்றதேல்லாம் அதற்க்கு அப்புறம் தான் 


டிஸ்கி : எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லை 

14 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நகைச்சுவையுடன் கூடிய வாழ்க்கைக்கு உகந்த கரு்த்து..

ரசனையுடன்..

துளசி கோபால் said...

அட! இன்னிக்குத்தான் உங்க வீட்டுப் பக்கம் வர்றேன். தினம் ஒரு பதிவாப் போட்டுத் தாக்கறீங்க:-)))))) மூணே மாசத்தில் 62 ஆஆஆஆஆஆஆஆ!!!!!!

இனிய பாராட்டுகள்.

M.R said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
நகைச்சுவையுடன் கூடிய வாழ்க்கைக்கு உகந்த கரு்த்து..

ரசனையுடன்..

ரசிப்புக்கு நன்றி நண்பரே

M.R said...

துளசி கோபால் said...
அட! இன்னிக்குத்தான் உங்க வீட்டுப் பக்கம் வர்றேன். தினம் ஒரு பதிவாப் போட்டுத் தாக்கறீங்க:-)))))) மூணே மாசத்தில் 62 ஆஆஆஆஆஆஆஆ!!!!!!

இனிய பாராட்டுகள்

வருக வருக என்று வரவேற்க்கிறேன்

இப்பிடி நாலு பேறு வந்தாதானே வீடு கலகலப்பா இருக்கும்

தினந்தோறும் வாங்க , சில நாட்கள் இரண்டு மூன்று படையல் ( பதிவு ) கூட உண்டு

RAMA RAVI (RAMVI) said...

அருமையான கருத்து,M.R.

M.R said...

RAMVI said...
அருமையான கருத்து,M.R.

வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி ராம்வி சகோ

vidivelli said...

hahaha....

ஆகா நல்ல அசத்தலான பதிவு,,
புதுசா வந்தால் காப்பி ஒன்றும் தாற பழக்கம் இல்லையோ?
கீழ தீனியும் போட்டுக்கிடக்கு,,,,,பிறகு போடலைஎன்று சொல்லுறேலை...
பதிவிற்கு வாழ்த்துக்கள்,,

சக்தி கல்வி மையம் said...

ஏற்கெனவே தெரிந்த கதை என்றாலும் அந்த விடயம் உண்மை..

Thanks 4 sharing..

M.R said...

vidivelli said...
hahaha....

ஆகா நல்ல அசத்தலான பதிவு,,
புதுசா வந்தால் காப்பி ஒன்றும் தாற பழக்கம் இல்லையோ?
கீழ தீனியும் போட்டுக்கிடக்கு,,,,,பிறகு போடலைஎன்று சொல்லுறேலை...
பதிவிற்கு வாழ்த்துக்கள்,,


கண்டிப்பா ,காப்பி கலந்து எடுத்து வருவதற்குள் நீங்க கெளம்பிட்டிங்க.அடுத்தமுறை வரும்போது ரெடியா எடுத்து வைக்கிறேன் சகோ

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஏற்கெனவே தெரிந்த கதை என்றாலும் அந்த விடயம் உண்மை..


நன்றி நண்பரே

மகேந்திரன் said...

வாழ்வியல் தத்துவம் அடங்கிய கதை.
சொன்னவிதம் அருமை.

M.R said...

மகேந்திரன் said...
வாழ்வியல் தத்துவம் அடங்கிய கதை.
சொன்னவிதம் அருமை.

கருத்துக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லை

மாய உலகம் said...

ஓ இந்த கதையிலிருந்து தான் .... வடிவேல்,தம்பி ராமையா& பெஞ்சமின் காமெடி எடுத்துருப்பாய்ங்களோ....( உனக்கு சதாம் உசேன தெரியுமா.....டீ கட முனியாண்டி தெரியுமா.......)

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out